பக்கம்:பருவ மழை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றுதொட்டு இன்றுவரை உழைத்துழைத்து அணுவளவும் பயன்காணு ஏழைமக்கள் குன்றனையத் தோள்துளிர்த்த வேர்வையாலே குவிந்த செல்வம் அத்தனையும் குவித்துக்கொண்டுத் தின்றழித்த ஜமீன் இனம்தார் முறையை மாற்றத் திட்டமிட்டால் இதற்கெதிர்ப்பு கஷ்ட ஈடு? என்றுபல கோடிபொருள் கேட்கின்ருர்கள்! எதற்காகக் கொடுக்க வேண்டும் நஷ்டஈடு? இந்துமதம் இனம் ஒழிப்பால் அழிந்து போமாம்! இறைவன்திருப் பூசனைகள் ஒழிந்து போமாம்! செந்தமிழும் சீர்குலைந்து சிதைந்து போமாம்! சென்னெறியைப் பரப்புமுறை குறைந்து போமாம்! பந்தமற்ற மடத்தலைவர் பரம்பரைக்கும் பாதகத்தை விளக்கின்றீர்! பாபம் நேரும்! சிந்திப்பீர் செப்பிவிட்டோம் என்று சொல்லிச் செப்பிடுவித் தைகாட்டித் திரிகின்றர்கள்! நாடாளும் தலைவர்கட்கும், சபையிலுள்ள நாட்டுமக்கள் தேர்ந்த உறுப் பினர்க்கும் ஒர்சொல்! ஓடாது உழைக்காதுண் டுடல்கொழுத்து உலகுக்குச் சுமையாக வாழ்பவர்க்கு ஈடாகப் பாட்டாளி மக்கள் தந்த இணையற்ற செல்வத்தைப் பங்குபோடக் கூடாது! கூடாது. செப்புக்காசும் கொடுத்திடவே கூடாது மக்கள் ஆணை! 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/143&oldid=807273" இலிருந்து மீள்விக்கப்பட்டது