பக்கம்:பருவ மழை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii தத்துவ நயம் : வேதங்கள் உபநிடதங்கள் கூறுகின்ற பிறப்பு, இறப்புத் தத்துவத்தை மிகவும் நயம்பட யாவரும் அறியும் வண்ணம் எளிமையாக உரைப்பது போற்றத் தக்கதாயுள்ளது. பூதங்கள் ஐந்தாலே உலகின் சேர்க்கை! புலன் ஐந்தின் ஆட்டம்தான் மனிதன் வாழ்க்கை காதங்கள் ஒன்றுபட்டுஓர் உருவ மாகி நல்உயிர்ப்புக் கொண்டிடுங்கால் பிறப்பென் கின்ருேம் பேதமுற்றுப் பூதம்ஐந்தும் பிரிந்து சென்று பிரபஞ்சப் பெருவளியில் கலத்தல் சாவாம்! வேதங்கள் உபநிடதம் மறைகள் எல்லாம் விரிந்துரைக்கும் தத்துவங்கள் இஃதே யாகும்! (பக். 182) அவல அலைகள் : தன் மைந்தன் அசோகன் இறந்தமையால் ஏற்பட்ட இதயக் குமுறலில் கவிஞர் சிந்தும் கண்ணிர் அனைவருடைய கண்களையும் அருவியாக்கும் என்பது உறுதி, பிள்ளையைப் பறிகொடுக்கும் பெற்ற நெஞ்சத்தின் சோகம் எத்தகைய தாயிருக்கும் என்பதை அப்பாடல் உணர வைக்கிறது. எனக்கு நீ இறுதி காளில் ஈமைகள் செய்வா யென்று நினைத்திருந் தேன்நான்; அந்த கியதிக்கு நேர்மா ருக உனக் கு கான் ஈமை செய்ய ஒப்பிய்ை; கெஞ்சில் மூளும் கனல் அலை தணிவதென்று: கண்மூடும் நாளில் தான? (பக். 192)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/15&oldid=807297" இலிருந்து மீள்விக்கப்பட்டது