பக்கம்:பருவ மழை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரளித்த பிச்சை இந்த அரசு என்ற நன்றியும் அறிவுமின்றி அன்னை நாட்டின் மண்ணில் மோத வருவதோ! (படை) பதினெட்டாண்டு முடிவதற்குள் பாகிஸ்தானின் மக்களைப் பகடைக்காய்கள் என உருட்டிப் பதவியைக் கைப் பற்றியே மதிபடைத்த தலைவர் பல்லோர் விதி முடித்த கூற்றுவன் மமதை கொண்ட அயூப்கான் இம் மண்ணில் இன்னும் வாழ்வதோ? (படை) நாற்பத்தெட்டு கோடி மக்கள் நல்லறம் செழிக்கவும் சீர்மிகுந்த ஜனநாயகக் கொள்கை என்றும் நிலைக்கவும் ஆர்ப்பரிக்கும் சீனைே(டு) அயூப்கானையும் அடக்கவும் ஆசியாவில் அமைதி அன்பு அறநெறி தழைக்கவும் (படை) உலக மக்கள் கலக மின்றி ஒன்றுபட்டு வாழவே உறுதி கொண்ட ஆசியாவின் ஜோதி வாழ்ந்த காட்டிலே 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/150&oldid=807299" இலிருந்து மீள்விக்கப்பட்டது