பக்கம்:பருவ மழை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதத்தின் விடுதலைக்கு மடடு மின்றி பாரினிலே எங்கெங்கு அடிமை யென்னும் கோரவிருள் இருந்தாலும் அதனை மாய்க்கும் கொள்கையதே என்னுடைய கு றிக்கோ ளென்று ஊரறிய உலகறிய கல்லோர் தங்கள் உள்ளமெல்லாம் உணர்ச்சிகொண்டு உவந்துவாழ்த்த வீரமுரசறைந்துகின்றன் அடிமைச் சேற்றில் வீழ்ந்திருந்தோர் தளையறுக்கும் வீரனு னன் வாடிகின்ற பயிரினுக்கு வான்மழை போல் வன்பசியை நீக்கவந்த உணவினைப் போல் டிேயமாக் கடலிடையே வீழ்ந்த யர்ந் தோர் நிலையுணர்ந்து மீட்கவந்த மரக்கலம் போல் சாடவரும் வெம்புலியைச் சுட்டு வீழ்த்திச் சமயத்தில் உதவுகின்ற நண்பனைப் போல் டுேபுகழ்க் காந்திமகான் பார தத்தின் நிகரற்ற தனித்த லைமைப் பதவி யேற்ருர்! மனிதர்களின் தலைமையிலே சுதந்திரப் போர் வளர்ந்துவந்த முறையகற்றி மகாத்மா காந்தி புனிதமிகும் தலைமையின்கீழ் விடுதலைப் போர்ப் புதியவழிப் புரட்சிமுறை வகுத்த தற்கும் தனித்தபல மாற்றங்கள் உண்டு zwrai! சத்தியமும் தியாகமும்தான் அதற்கு வித்தாம்! இனியதொரு குறிக்கோளை எட்டு தற்கும் இறையருளும் அறச்செயலும் வேண்டு மென்ருர் 138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/152&oldid=807303" இலிருந்து மீள்விக்கப்பட்டது