பக்கம்:பருவ மழை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடு விடுதலை யடைந்தா லன்றி இங்கே நலிவுற்றுப் பொலிவற்று நமது மக்கள் வாடுகின்ற அவலநிலை-வறுமைத் தீயால் வயிற்றுக்குச் சோறில்லாக் கொடுமை, மற்றும் கேடுதரும் அறியாமைக் கீழ்மை யாவும் கிளர்ச்சியில்ை தீராது உரிமைப் போரில் பாடுபடத் தளராத உறுதிகொண் டார்! பலனைஎதிர் பாராத தொண்ட ரானுர்! எதிர்ப்புகளுக் கஞ்சாத இதயம் கண்டோம் இன்னல்களை இன்பமென்றே ஏற்கக் கண்டோம் சதிக்குற்றம் பலசுமத்திச் சிறைக்கூ டத்தில் தள்ளியுடன் சித்ரவதைச் செய்திட்டாலும் கதியற்ற அகதியைப்போல் கடத்திச் சென்று கண்காணுச் சீமைகளில் வதைத்திட் டாலும் மிதியுண்டு அடியுண்டுக் கொலையுண் டாலும் மீட்சியுண்டென் றிருப்போனே விரன் என்ருர்! தார்மீக ரீதியிலே சமுதா யத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்தத் திட்டம் தீட்டி நேர்வழியாம் தர்மகர்த்தாப் பொதுமை திே நெறிமுறையைக் கைப்பிடிப்பீர்; என்ருர் அண்ணல்: யார்கேட்டார் அவர்பேச்சை இக்காள் மட்டும்? அநீதிநிறை உடமையினர் உழைப்பா ளர்க்குச் சீரான உரிமைதர மறுத்தார்; ஏழைச் சினம்தியாய் மாறிடுங்கால் எவர் தடுப்பார்: 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/153&oldid=807305" இலிருந்து மீள்விக்கப்பட்டது