பக்கம்:பருவ மழை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதியென்னும் நிதியினையும் மாய்க்கும் நல்ல மனிதனென்ற நற்பெயரைப் போக்கும், நல்லோர் இதயத்தில் துயர்சேர்க்கும், என்றும் ஏழை. எளியவர்தம் வாழ்க்கையினை நரக மாக்கும் மதுவென்னும் தீமையினை ஒழிக்கக் காந்தி மகான்பட்ட பாடனைத்தும் வியர்த்த மாகச் சதிசெய்யும் ஏற்பாட்டின் கொடுமை நீக்கித் தெய்வம்தான் காப்பாற்ற வேண்டும் காட்டை! உலகமெங்கும் சத்தியத்தைச் சமாதா னத்தை உயிர்களிடை அன்புதயை அகிம்சைதன்னை நிலைநிறுத்த வாழ்க்கையெல்லாம் உழைத்து யர்ந்த நேர்கைமிகு காந்தி யண்ணல் பிறந்த காட்டில் பலியிடுதல் கொலைபுரிதல் கொள்ளை மற்றும் பலாத்காரச் செயல்களின்றும் மதத்தின் பேரால் நிலவுகின்ற நிலையதனை நினைத்துப் பார்த்தால் கெக்குருகும் கல்லோர்கள் நெஞ்ச மெல்லாம்! - தூய்மைமிகும் பேரறிவு துலங்க வேண்டின் துகழற்ற தொழிற்றிறமை ஓங்க வேண்டின் வாய்மையுடன் நல்லொழுக்கம் பெருக வேண்டின் வருங்காலம் ஒளியுடைத்தாய்ச் சிறக்கவேண்டின் தாய்மொழியே பயிற்சிமொழி ஆன லன்றித் தாழ்ந்திருக்கும் மாந்தர்நிலை மாரு தென்று நோய்தடுக்கும் மருத்துவன்போல் அண்ணல் காந்தி நூறுநூறு முறையுரைத்தும் உணர்ந்தா ரில்லை! tA0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/154&oldid=807308" இலிருந்து மீள்விக்கப்பட்டது