பக்கம்:பருவ மழை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியக் கவிஞர் AeS தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் செழித்தோங்க வேண்டுமென்று செப்பிச் சென்ற மாதுரத் தமிழ்க்கவிபாரதிதன் ைைச வளமையுற வழிவழியாய்க் கவிதை பாடும் நேமமிகு கவிஞருக்குள், தேசியப் போர் கிகழ்த்துமுறை காந்தியத் தத்து வங்கள் பாமுறையால் வழங்குவதே தொழிலாய்க் கொண்ட பைந்தமிழன் காமக்கல் கவிஞன் வாழி! சித்திரக் கைத் தொழிலினிலே இளமை தொட்டே தேர்ச்சியுற வேண்டுமென்னும் ஆர்வத் தாலே எத்தினமும் இரவு பகல் ஓய்வில் லாமல் எழிலுருவம் தீட்டுவதில் இன்பம் கானும் சித்தமதில் தமிழறிவும் கவிதைப் பண்பும் தேச விடுதலைப் பற்றும் காந்தியத்தின் சத்தியகன் நெறியினிலே உளமும் தோய்ந்த தகைமை மிக்கோன் காமக்கல் கவிஞன் வாழி! 143'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/157&oldid=807313" இலிருந்து மீள்விக்கப்பட்டது