பக்கம்:பருவ மழை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தமிழனென்ருேர் இனமுண்டு; தமிழர்க் கென்றே தனியேவோர் குணமுண்டு' என்னும் உண்மை அமுதொழுகப் பாடியகற் கவிதையைப் போல் ஆயிரம் பல்லாயிரம் பாட்டமைத்துத் தந்து குமரிமுதல் வேங்கடத்தின் தமிழெல் லைக்குள் குலவு தமிழரசுரிமைக் கொற்றம் காண சமவுரிமைத் திட்டமெல்லாம் தீட்டிக் காட்டி தமிழ்க்கவி வெ. ராமலிங்கத் தகையோன் வாழி "சுதந்திரத்தின் சூரியனிங் குதிக்கும் நேரம் துங்காதே தமிழா' வென்றுணர்ச்சி யூட்டும் இதமிகுநற் கவிதை பல இயற்றக் கண்டோம் இன்னுயிராம் சுதந்தரமும் பெற்ருேம், ஆனல் புதுமையென்ன எனக்கேட்டால், வெள்ளையாட்சி போனதன்றி தமிழரசு தோன்றக் காணுேம்! இதுமாறத் தமிழுரிமைக் கவிகள் பாடி என்றென்றும் வாழிய வெ. ராமலிங்கம்! 5.2.49 ம், கோவை, பி, எஸ். ஜி. கல்லூரியில் ராமக்கம் adருருக்குப் பாராட்டும் பணமுடிப்பும் வழங்கியபோது: கொடுத்த வாழ்த்து மடல். t44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/158&oldid=807315" இலிருந்து மீள்விக்கப்பட்டது