பக்கம்:பருவ மழை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv மகனே இழந்து துடிக்கின்ற தந்தையுள்ளத்திற்கு ஆறுதல் கூறுவதன்றி நாம் வேறு என்ன செய்ய முடியும்? மகனைப் பறி கொடுக்கும் தந்தையர் துயர் இத்தகையதாகவே இருக்கும் என்பதை இந்திரசித்தன் மாண்டபோது இராவணன் புலம்பிய, 'எனக்கு நீ செய்யத் தக்க கடனெலாம் இரங்கி ஏங்கி உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத் துள்ளார்' என்ற கம்பராமாயணப் பாடலிலும் காண்கிருேம். கவிஞர் உள்ளம் தமிழர்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதைக் கவிஞர் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார். காயினம்தான் தன்னினத்தை எதிர்த்துச் சாடும் கற்றமிழர் வாழ்விலுமா இந்தக் கேடு? (பக். 17) ஊருக்கு நூறுகட்சி உண்டு பண்ணி ஒற்றுமையைக் குலைக்காதீர்;... (பக். 42) பெண் விடுதலை வேண்டும்; பெண்கள் விடுதலையில்லா நாட்டு மக்கள் கோழைகளாகிவிடுவர் எனக் கவிஞர் சமூகத் திற்கு எடுத்துரைக்கிருர், விடுதலைமங்கையர்க்கில்லை எனில்இந் நாட்டில் வீரர்கள் எங்ங்னம் உதிப்பார் (பக். 99) என்பது கவிஞரின் வின? தமிழறிவு ஊட்டிய, தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழப் பாடுபட்ட பெரியார்களை மறந்தால் அது நன்றி கொன்ற செயலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/16&oldid=807319" இலிருந்து மீள்விக்கப்பட்டது