பக்கம்:பருவ மழை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையெனும் எழுச்சிகிறை பருவத் திற்குள் எண்ணரிய தத்துவங்கள் எல்லாம் கற்றும் உளம் ஒருமைப் பாடுகண்டு ஒதுங்கி டாமல் ஒரு பொருளாம் இறையருளின் உண்மை தன்னைத் தெளிவு பெறக் காண்பதற்கு முயற்சித்(து) ஏங்கிச் சித்தமது கலங்கி நொந்துப் பித்த இனப்போல் ஒளிச்சுடரை-இருட்கடலின் இடையே தேடி ஓயாத நெடும்பயணம் தனைமேற் கொண்டார்! அரும்பெனவே முகிழ்த்துவிட்ட ஆசை வெள்ளம் அலைகடலாய் விரிந்துவிட, அதனுள் வீழ்ந்த துரும்பெனவே அலைக்கழிந்துத் துடிதுடித்துத் தூயதொரு தேசிகனைத் தேடுங் காலைக் கரும்பெனவே இராமகிருஷ்ண தேவர் வந்து, கைகொடுக்க-நரேந்திரர்மெய் ஞானம் பெற்றுப் பரம்பொருளைத் தன்னகத்தே கண்டு (உ)வந்துப் பாரினுக்கு உழைப்பதையே கோன்பாய்க் கொண்டார்! திருவருளால் வேதாந்த சித்தாக் தத்தின் தெளிவுபெற்றுத்-திசைமொழிகள் பலவும் கற்றுக் குருவருளால மெய்ஞான சித்தி பெற்றுக் கொண்டதன்பின் முக்திவழி தனைத்தே டாமல் பருவுலகில் பாரதத்தின் நிலையைப் பார்த்தார்! பசிக்கொடுமை, சாதிமதப் பகைமை, ஏழ்மைக், கருணையின்மை, எங்கெங்கும் நிலவக் கண்டார் கண்ணிரைத் துடைத்தெழுந்தார் கடமை யேற்ருர்! 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/165&oldid=807329" இலிருந்து மீள்விக்கப்பட்டது