பக்கம்:பருவ மழை.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்சுரக்கும் மாமழையும், மலையும், காடும், வற்ருத ஜீவநதிக் கிளையும் பாய்ந்துத் தேன்சுரக்கும் பூங்காவும், தானி யத்தின் திரள்சுரக்கும் வயல்களும், காய், கனி கிழங்கு ஊண்சுரக்கும் இயற்கை வளம் பொழியும் நாட்டில் உயிர்வதைக்கும் பட்டினிப்பேய்ப் பசியும் நோயும் ஏன் மலிந்த(து) என்றிரங்கி இதயம் நொந்தார்! இதைமாற்றும் பணியினையே தவமாய்க் கொண்டார். பண்டிருந்த சமதருமச் சமுதாயத்தைப் பாழ்படுத்தும் சாதிமதப் பாகு பாட்டைக் aதாண்டுகில நாட்டிச் செல்வக் கொள்ளே யிட்டுக் குவித்துவைத்துச் சிலர் கொழுத்து வாழப் பல்லோர் உண்டி, உடை, உறையுளின்றி உழைத் துழை த்து உடல்மெலிந்து உளம்கலியும் கொடுமை தன்னை எண்டிசையும் எதிரொலித்து, மாற்றம் காண எழுச்சிமிகும் போர்தொடுத்த புரட்சி வீரன்! இமயமுதல் குமரிவரை எங்கும் சென்று இந்தியான் ட்ைடுமக்கள் எல்லோர் மாட்டும் சமய அருள் கெறிவளர்க்கத் திட்ட மிட்டுச் சன்மார்க்கத் தொண்டுளத்தோ(டு) எழுந்த ஞானி குமையுகின்ற பசி, ஏழ்மைக், கல்வி யின்மைக் கொடுமைகளால் மக்கள் படும் இன்னல் கண்டுச் சமயநெறி பரப்புவதைப் பின்னே வைத்துச் சமதருமப் புரட்சிப்போர் தனைமேற் கொண்டார்: 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/166&oldid=807331" இலிருந்து மீள்விக்கப்பட்டது