பக்கம்:பருவ மழை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமாமணி கவிஞர் கண்ணதாசன் பொன்விழா வாழ்த்து! கண்ணதாசன் என்னினிய காதல் தம்பி கனிச்சுளைபோல் கவிப்பண்கள் இசைக்கும் தும்பி எண்ணத்தில் செயன்முறையில் எழுச்சிப் பேச்சில் இலக்கியத்தில் உரைகடையில் எழுத்து விச்சில் கண்ணனைய எளியவர்தம் பக்கம் கிற்கும் கருணை உள்ளம் கிறைந்திருக்கும் தங்கக் கம்பி! பண்ணையெனக் கவிப்பயிரை வளர்க்கும் செஞ்சொற் பாவலன் பொன் விழாவுக்கென் நல்வாழ்த் துக்கள்! பள்ளி செல்லும் அந்நாள் தொட் டிந்நாள் மட்டும் பார்க்கின்றேன் கண்ணதாசன் வளர்ச்சி தன்னை! பள்ளியிறு திப்படிப்பை முடிக்கும் முன்பே பத்திரிகைத் துறையினிலே நுழைந்தான்! பின்னே வெள்ளித்திரை உலகினிலே பாட்டி சைக்க வேடிக்கை யாய்ப்புகுந்தான்! வெற்றிகண் டான்! தெள்ளுதமிழ் இலக்கியத்தில் இலக்க ணத்தில் தேர்ந்தபெரும் புலவனெனும் சிறப்பும் பெற்ருன்! $55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/169&oldid=807336" இலிருந்து மீள்விக்கப்பட்டது