பக்கம்:பருவ மழை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χν தங்கமெனும் தமிழ்த் தென்றல் திரு. வி. க. வைத் தலைவணங்காத் தமிழன் நன்றிகொன்ருே வைான்: (பக் 149) என்று கூறுவதன் மூலம் அத்தகைய உத்தமர்களே நினைவி லிருத்தி வணங்கவேண்டும் எனத் தமிழ்ச் சமுதாயத்தினைக் கவிஞர் கேட்டுக் கொள்கிரு.ர். தமிழுக்கு ஊறு என்ருல் அதைத் தமிழன் எதிர்த்தே தீர வேண்டும். உயிரை இழந்தாலும் தமிழ் உரிமையை இழக்கக்கூடாது. விழியைப் பறித்தாலும் பொறுப்போம்-தமிழ் மொழியைச் சிதைத்திடும் எவரையும் எதிர்ப்போம் - (பக். 270) என்பது ஒவ்வொரு தமிழனின் இதயக் குரலாக ஒலிக்க வேண்டும். எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்ற நிலை தோன்ற வேண்டும். அதற்கு ஆட்சி மொழி பயிற்சி மொழி ஆல்ை தான் முடியும் என்பதைக் கவிஞர் வலியுறுத்திச் சொல்கிருர், ஆட்சிமொழி பயிற்சிமொழி ஆகா விட்டால் அன்இனமொழி உயர்ந்திடுவ தெந்தக் காலம்: (பக். 17) "ஆங்கிலத்தை விட்டுவிட்டுத் தமிழை ஏற்பதா? அஃது அறிவு வளர்ச்சியைத் தடுக்குமே” என்று தடுமாறுபவர்கள் பிரான்சு, ருஷ்யா, செர்மனி, இத்தாலி முதலிய தேசங்கள், அறிவுபெற்றது ஆங்கிலத்தின் துணையால் தான? ஆகாத வாதம் இதை யாரே ஏற்பார்? (பக். 18) என்ற கவிஞரின் வினவினை நன்கு சிந்தித்துப் பார்த்தால் அறிவுத் தெளிவடைவர் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/17&oldid=807338" இலிருந்து மீள்விக்கப்பட்டது