பக்கம்:பருவ மழை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியலின் சிக்கலிலே மாட்டிக கொண்டு அடுக்கடுக்காய் அனுபவித்த இன்ன லெல்லாம் வரலாற்றுக் காவியமாய்த் தொகுத் தெடுத்து "வனவாசம்' என்கின்ற பெயர் கொடுத்துப் பரிசெனவே தமிழகத்து மக்களுக்குப் பதிப்பித்து எங்கெங்கும் பரவச் செய்த விரசமிகும் நூலதனப் படித்துப் பார்த்து வியப்புற்றேன்! துணிவினைக்கண் டுளமு வந்தேன்! தனவணிகர் குலத்தினிலே அவ்வப் போது தமிழ்வளர்க்கும் அறிஞர்பலர் தோன்று வார். அவ் வினைமுடிக்க வந்தவன்தான் கண்ண தாசன் வெற்றிமிகும் இலக்கியங்கள் பலதும் தந்தான்! நினைவினிலே பசுமையுடன் என்றென் றைக்கும் நிச்சயமாய் நிலைத்து நிற்கும் அவன் எழுத்து மனமுவந்து பொன்விழாவை மட்டு மின்றி மணி-முத்து-விழாக்களுக்கும் எனது வாழ்த்து சிறியதொரு வட்டத்திற் சிக்கிக் கொண்டு சீரழிக்கும் அரசியலை ஒதுக்கித் தள்ளி இறைவனது படைப்பிலுறுங் கோண லேனும் ஏனையபல் துறையிலுள்ளோர்க் கொடுமை யேனும் குறைதவிர்க்கப் பாடுவதே கொள்கை:யாக்கிக் குரல் கொடுக்கும் துணிவு நிறைக் கவிஞ கை அறமுரசு கொட்டிடுக! வெற்றி சூழ்க! அடிமையில்லை; யார்க்கும் அஞ்சத் தேவை யில்லை! 1864

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/170&oldid=807340" இலிருந்து மீள்விக்கப்பட்டது