பக்கம்:பருவ மழை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்துயிரும் ஆண்டவனின் அம்ச மென்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை கண்டு தினைத்துணையோர் உயிர்க்கும்இன்னல் சேரக் கண்டால் சிந்தைமிக கொந்துருகிக் கருணைக் கண்ணிர் பனித்துளிகள் என உதிர்த்து உடல்ப தைத்து. பரிந்துவந்து உபசரிக்கும் பண்பு தன்னை நினைத்துலக உயிர்க்குலமே வள்ளல் என்று நிகழ்த்தும் வடலூர் முனிவன் புகழே வாழ்க! ஆரியமும் செந்தமிழும் கற்றுத் தேர்ந்த ஆயகலை வாணர்கட்கும் தெளிவுண் டாக்கும் சீரியகற் போதகராய் விளங்கி, இந்தச் செகத்தில்இணை சொல்லுதற்கு இயலா ஞானச் சூரியனுய் உதித்த அருட் ஜோதி வள்ளல் தூயசுத்த சன்மார்க்கப் பக்திப் பண்கள் மாரியெனப் பொழிந்துகம்மை வாழ வைத்த மாதவனின் மலர்ப்பதத்தை மனத்துள் வைப்போம்! தத்துவங்கள் எல்லாமே தலைகீழாகிச் சாத்திரங்கள் கோத்திரத்துக் கொன்ருய் மாறி, எத்தர்களின் ஏமாற்று வித்தை யோங்கி இருட்சாதி மதங்கள் பல தோற்று விக்கும் பித்தர்களே ஞானியென வேட மிட்டுப் பிதற்றுங்கால் ஞாலத்தின் மயக்கம் நீங்கச் சத்தியசன் மார்க்கசங்கம் தன்னைக் கண்ட தனிக்கருணை வள்ளல்திரு வடிகள் சார்வாம் $58,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/172&oldid=807344" இலிருந்து மீள்விக்கப்பட்டது