பக்கம்:பருவ மழை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்களும் முத்தர்களும் தேடிக் காளுச் சின்மயகற் றேசிகனைச் சித்தத் துள்ளே வைத்திருக்கும் பேறுபெற்ற வடலூர் ஞான வள்ளளெனும் இராமலிங்க அடிகள் தந்த புத்தமுதப் பெருங்கருணைத் தெய்வீ கச்சீர் பொழிகின்ற திருவருட்பாப் படிக்கக்-கேட்க நித்தியமாம் பரம்பொருளைக் காட்டும் சாகா கிலையருளும் சன்மார்க்க நெறியும் கூட்டும்! தன்னலமே குறிக்கோளாய் முத்தி மார்க்கம் தனைகாடிச் செல்லுவதே வழக்க மாக முன்னிருந்த ஞானியர்கள் காட்டைத் தேடி மூலையிலோ, குகைகளிலோ, ஒளிவார்! அந்தத் தன்னலத்தின் வழிமுறைகள் அனைத்தும் மாற்றித் தாரணியின் ஜீவர்கள்பால் இரக்கம் கொண்டு இன்னலினல்-ஏழ்மையில்ை-பசியினலே இடருற்றேர் துயரகற்றும் எம்மான் வாழ்க! பால்வருணப் பேதத்தை நீக்கி, என்றும் பகைவளர்க்கும் ஜாதீயப் பிரிவை நீக்கி கால்வருணம் போதிக்கும் கவைகள் நீக்கி கலிவுதரும் தீண்டாமைக் கொடுமை நீக்கித் தோல்வருணம் காட்டுகின்ற மாந்த ரன்றித் தொல்லுலகில் உயிர்க்குலங்கள் அனைத்தும் தெய்வ மேல்வருணம்: ஆகுமென்னும் ஆன்ம நேய மிகுத்தொருமைப் பாடுகண்ட மேலோன் வாழ்வு 鳞59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/173&oldid=807346" இலிருந்து மீள்விக்கப்பட்டது