பக்கம்:பருவ மழை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi தங்கு தடையற்ற எண்ண வெளிப்பாடு கவிஞர்கள் எத்தகையவர்கள் என்பதையும், தான் எத்தகைய உள்ளம் கொண்டவர் என்பதையும் கவிஞர் கு சா. கி. இந்நூலில் கூறியுள்ளார். கவிஞர்கள், 'பாமழையைப் பொழிவதற்குத் துணிந்து விட்டால் பரமன்வந்து தடுத்தாலும் நிறுத்த” (பக். 184) மாட்டார்கள். எவர் தடுத்தாலும் எண்ணியதை அஞ்சாது கவிஞர்கள் எடுத்துரைப்பர் என்பதே இதன் பொருள். கவிஞர்கட்கு அவர் கூறியுள்ள இலக்கணத்திலிருந்து அவரே மாற முடியாதல்லவா? அதற்கேற்பவே தன் நெஞ்சில் பட்டதை பட்டவாறே அவர் எடுத்துரைத்துள்ளதை இந் நூல் தெளிவாக்குகிறது. தன்னை அவர், ஏழைக் கவிஞன்தான்; என்ருலும் மற்றவர்போல் கோழைக் கவிஞனல்ல; குமுறும் எரிமலை நான்! . (பக். 258) என இனம் காட்டிக் கொள்கிருர், குமுறும் எரிமலையின் வெடிப்பில் வெளிப்பட்டதே இங்குள்ள கவிதைக் குழம்பு! வாழ்க கவிஞர் கு, சா. கி. அவர்கள் எப்பொழுதும் வாயில் வெற்றிலை பாக்குத் தரித்த வண்ணமே இருப்பவர். வெற்றிலை, பாக்கு, சுண்ணும்பு ஆகிய மூன்றின் கலவையால் அவர் வாய் சிவந்து சிறப்புப் பெறுவது போலவே எளிய நடை என்ற வெற்றிலை யுடன், கருத்து வளம் என்ற பாக்கைச் சேர்த்து, யாப்பமைதி என்ற சுண்ணும்பை அளவுடன் தடவி தன் கவிதையெனும் வாய்க்குச் சிவப்பூட்டியிருக்கிருர், சிலருடைய வாய்க்கு வெற்றிலை பாக்கு அதிக சிவப்பைத் தராது; சிலருக்கோ நன்கு சிவக்கும். கு. சா. கி. யின் வாய் நன்கு சிவப்பது போலவே அவருடைய கவிதையும் சிறந்து காணப்படுகிறது. வளர்க அவர்தம் புகழ்! அன்பன், சு. செல்லப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/18&oldid=807365" இலிருந்து மீள்விக்கப்பட்டது