பக்கம்:பருவ மழை.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எாது வீரம்? யார் வீரன்? SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA இழப்புக்கள் எதுவரினும் எதிர்த்துகின்று எதிரிகளை அழிப்பிதிலே இன்பம் கண்டு பழிப்புண்கள் ஆற்றுதற்குத் துடிதுடித்துப் பகைப்புலத்தைக் கருவறுத்து வஞ்சம் தீர்த்து விழுப்புண்கள் மார்பனைத்தும் முகம னைத்தும் விரவிளங்கும் மணிகளென்ன ஒளிபரப்பிச் செழிப்புற்றுக் களத்தில்வென்ற சிறப்பி ைேடுச் சிம்மமெனச் சேவனெனத் திகழ்வோன் வீரன்! வீரன்என்றும் புறப்புண்ணை விரும்ப மாட்டான்! வேலெதிர்த்து வரினும்விழி இமைக்கமாட்டான்' சோரன்எவனேகளத்தில் மறைக் திருந்து சுடுசரத்தைப் புறமுதுகில் ஏவி விட்டான்! யாரதற்குப் பொறுப்பென்று புறப் புண் மூடி ஆண்மையின்றிக் களத்தைவிட்டுத் திரும்ப மாட்டான்' பாரறிய வடக்கிருந்து மானம் காப்பான்! பைந்தமிழன் வீரம்.இது பண்டை நாளில் 18t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/181&oldid=807369" இலிருந்து மீள்விக்கப்பட்டது