பக்கம்:பருவ மழை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழர், தமையிகழ்ந்த வடவர் வேந்தர்ச் செருக்கடக்கி அவர்தலைமேல் இமயக் கல்லை நொந்துசுமந் தெடுத்துவரச் செய்த சேரன்; நூதனக்கண் காட்சியென்றெல் லோர்க்கும் காட்டும் விந்தைகண்டு பாண்டியனும் சோழ வேந்தும் வியந்தனராம் எதற்கு:சேரன் வெற்றிக் கல்ல வெந்த புண்ணில் வேல்செலுத்தும் சிறுமை கண்டும்! வீழ்ந்த பின்னும் உயிர்சுமக்கும் திறமை கண்டும்! குன்றெடுத்த பெருந்தோளன் இலங்கை யர்கோன்; கொண்டபடைக் கலன்அனைத்தும் குலைந் தழிந்து கின்றிருந்த நிலையதனைப் பயன்படுத்தி நெடும்பகையை முடித்தழிக்கக் கணை யெடுத்து ஒன்றுதொடுத் தவன் உயிரை ஒழித்திடாது உத்தமப் போர் முறைகருதிக் கருணை யோடு. இன்றுபோய்நீ, நாளைமீள்வாய்' என்றே சொன்ன இராகவன்தன் வீரமஃதே இறவா வீரம் விலங்கனேய பலம்மிகுந்த சேனை கொண்டு வெற்றியினைக் குவிக்கமனப் பால்கு டித்து கலிங்கப்போர் தொடுத்திட்டான் அசோக மன்னன் கணக்கற்ற மனிதஉடல் சிதைந்த தங்கே - கிலமனைத்தும் பிணமலைகள் கிணத்தின் சேறு நின் றதையோர்க் கணங்கண்டான் நிலைகு ஜலந்தான்! கலகலத்துப் போனதவன் கருணை உள்ளம்! கைவாளே எடுத்தெறிந்தான் வீரனு னன் 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/182&oldid=807371" இலிருந்து மீள்விக்கப்பட்டது