பக்கம்:பருவ மழை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதத்தின் உட்பொருளைத் தாழ்ந்தோர் கேட்க விளம்பிடுவோன் நரகத்தைச் சேர்வான்; அந்த வேதத்தைக் கேட்ட இழி குலத்தோ ரெல்லாம் விண்ணகத்துச் சொர்க்கத்தைச் சேர்வா ரென்ற போதத்தைக் கேட்டுப் பல் லாயி ரம்பேர் புனிதமுற நான்கரகம் போவே னென்று சாதித்துக் கோபுரத்தில் நின்று வேத சாரத்தைச் சொன்னவனும் வீரன் தானே! விலைமதியா மனிதகுலம் தன்னைக் காக்க விண்ணுறையும் இறையளித்த தூத ரென்று உலகுபுகழ்ந் தேத்துகின்ற ஜெருச லத்து உத்தமனை-ஏசுவெனும்-ஒளிவிளக்கைசிலுவையிலே சேர்த்தணைத்து வைத்த றைந்த சித்ரவதைக் கொடுமையெல்லாம் சகித்துக் கொண்டு கொலமனத்துக் கொடியவர்க்கும் கலம்செய்யென்று கோரினுனே இறைவனிடம், அவனே வீரன்! துரியனே அஸ்தமிக்கா துலக மெங்கும் தொடர்ந்தரசு புரிந்துவந்த ஆங்கி லேயப் பேரரசுப் பெரும்படையின் வலிமை யெல்லாம் பின்னடைய அகிம்சையெனும் ஆயுதத்தால் பாரறியப் புரட்சிசெய்து சுதந்திரத்தைப் பாரதகாட் டுக்கும்மற்றைப் பகுதி கட்கும் யாரளித்தார்? அண்ணல்காந்தி அடிக ளன்ருே? அவரைவிடச் சிறந்தவீரன் அகிலத்தில் யார்? சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்ருண்டு விழாக் கவியரங் கில் அரங்கேறிய பாடல்கள். 6-11-6) "செங்கோல்” 11 169

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/183&oldid=807397" இலிருந்து மீள்விக்கப்பட்டது