பக்கம்:பருவ மழை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்திமுனை மேல்கடந்து வித்தை காட்டும் கலைஞனைப்போல் திரைஉலகில் அடுத்தடுத்து எத்தனையோ இன்னல்களை ஏற்றுக் கொண்டு எதிர்நீச்சல் இட்டேமுன்னேறிச் சென்று கித்தம்கித்தம் உழைப்பாலே உயர்ந்து கின்று நிகரற்ற நிறுவனத்தைக் கட்டிக் காக்கும் வித்தகராம், ஏ.வி.எம். செட்டி யாரின் வெற்றிகளை உணர்ந்தஉள்ளம் வியந்தே போற்றும்: தாய்க்கலையாம் நாடககற் கலைவ ளர்ந்தால் தமிழகத்தில் திரைக்கலையும் வளர்வ தற்கு வாய்ப்பிருக்கும், என்று-தன(து) அனுப வத்தால் வற்புறுத்திக் கூறுகின்ற ஏ.வி.எம் மின் ஆய்வுரையைச் செவிமடுத்துச் சிந்தை யேற்று அரசினரும்-திரையுலகும் முயன்ரு லன்றி நோய்பிடித்து கலிந்திருக்கும் திரைப்படங்கள் நூற்றுக்குப் பத்துகூட வெற்றி காணு பத்தாயி ரம்ருபாய்க் கொடுத்துப் பெற்றப் பாரதியின் எழுத்தோவி யங்களான முத்தான கவிதைகளின் உரிமை யெல்லாம் முழுமையதாய் மனமுவந்து காட்டுக்-கான சொத்தாக்கித் தந்துயர்ந்த அறத்தின் செம்மல்! தூயபல அறப்பணிகள் புரியும்:வள்ளல் இத்தரையில் கருணைமிகும் முருக வேள்தன் இன்னருளால் பன்னெடுநாள் இனிது வாழ்க! 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/186&oldid=807432" இலிருந்து மீள்விக்கப்பட்டது