பக்கம்:பருவ மழை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை உலகக் கலைகள் அனைத்திலும் தலைசிறந்த கலை கவிதைக் கலை! அதனிலும் உன்னதப் பெருமை வாய்ந்தது தமிழ் மொழிக் கவிதை என்பது ஆன்ருேர் கருத்து. இதற்கு முதலாவது காரணம் தமிழுக்கே உரிய தனிப் பெரும் ஆற்றல், அதன் தொன்மை, வன்மை, வளமை யாகும். இரண்டாவது காரணம் அதைக் கையாண்ட பெரு மக்களின் திறமை, தகுதி, புலமை ஆகியவையாகும். சிலம்பிசைத்த இளங்கோவடிகள், நைடதம் யாத்த அதி வீரராம பாண்டியன், போன்ற அரசர் பெருமக்களையும், திருவாசகம் தந்த மணிவாசகர், பெரியபுராணம் செய்த சேக்கிழார் போன்ற அமைச்சர் பெருமக்களையும், தேவாரம் முதல் திருவருட்பா ஈருகப் பக்திப் பனுவல்களை யாத்து வழங்கிய ஞானியார்களையும் பெற்றபேறு-தமிழ் மொழிக்கே யுரிய தனிப் பேருகும். சங்க காலம் தொடங்கி சென்ற நூற்ருண்டின் இறுதி வரை உள்ள இலக்கியங்கள் அனைத்தும் கவிதை நடை யிலேயே அமைந்திருப்பதைக் காணுகின்ருேம். இலக்கியங்கள் கவிதை யென்னும் கட்டுக் கோப்புக்குள் அமையப்பெற்றிருந்ததால்தான் ஏடுகள் அழிந்தாலும் அவற்றைத் தாங்கி இருந்த இதயங்கள் வழிவழியாகக் காத்துச் செவி வழியாக வழங்கிச் சிறப்பித்தன. காலப் போக்கில் சென்றவை பலவாயினும் நின்றவை சிலவேனும் நமது பண்டைப் பாரம்பரியப் பெருமைகளே உலகுக்குப் பறை சாற்றுவனவாய் இன்றும் நிலைத்து மணம் பரப்பு கின்றன. II

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/19&oldid=807440" இலிருந்து மீள்விக்கப்பட்டது