பக்கம்:பருவ மழை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்த் தெருந்தார்! சொல்லரிய அகிலாண்ட கோடி யெல்லாம் தோற்றுவித்து நீங்காத துணையாய் நிற்கும் வல்லமைசேர் ஈடிணையில் பரம்பொரு ளாம் வரைகடந்த பெருங்கருணை நிதியின் குன்றம் தொல்லுலகின் மாசுகளைத் துடைத்திடத் தன் தூயவருட் சுடரிலொரு துளியை, அன்னை கல்லதொரு மாமரியாள் மணிவயிற்றில் கயந்தளித்து ஞாலவிருள் கடிந்தான்! வாழி! கர்த்தனெனும் அருளமுதக் கடலான், ஞானக் கண்மணியை விண்ணவர்தம் காத லான சத்தியமும் கருணையுடன் சாந்தம் மேவும் தர்மகெறி தழைத்திடவும் தயவு கூர்ந்து இத்தரையில் மானுடர்தம் உருவம் தாங்கி ஏசுபிரான் எனும் பெயரால் பிறக்கச் செய்து உத்தமர் தம் பெருமைதனை உலகுக் கெல்லாம் உணர்த்திடவே இறைவன் இங்கோர் உபாயம் செய்தான்! 177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/190&oldid=807442" இலிருந்து மீள்விக்கப்பட்டது