பக்கம்:பருவ மழை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகிறையும் வறிஞர் இல்லின் தொழுவில் எங்கும் அடர்ந்திருக்கும் வைக்கோலின் கூலத்தின் மேல் மீனுறையும் கண்ணழகி மரியா-ளென்னும் மெல்லிழையாள் செய்தவத்தின் மேன்மை யாலே. வானுறையும் தெய்வமகன் மதலையாக வந்துதித்தா னென்றதொரு மகிழ்ச்சி மிக்கத் தேனுறையும் செய்தியினைக் கேட்டு இந்த ஜெகத்திலுறு ஜிவனெல்லாம் சிலிர்த்த தம்மா ஆரணங்கள் அண்ணல்புகழ் அளந்துகீட்ட ஆதவனும் தண்மதிபோல் குளிர்ச்சி யூட்ட ஆரணங்கின் கூட்டமெங்கும் திரண்டு நின்று அகங்குளிர்ந்து குழவியெழில் நலம் பாராட்டத் தோரணங்கள் வாயிலெங்குந் துலங்கி யாடித் துயவனின் பிறப்புயர்வைக் குறிப்பாற் காட்ட வாரணங்கள் பொருதும் வீரர் தோள்கள் மேலும் வளர்ந்ததம்மா மகிழ்ச்சியினல் வரைகள் போலும்: மேதினியில் தேவன்வந்து பிறந்த தாலே மேகம்பன் னிர் தெளித்து வாழ்த்துக் கூற மாதவனின் மலரடிக்குக் கவிர்ை சோலை மரம் செடிசேர்க் கொடிகளெல்லாம் மலர்கள் தூவ. ஆதவனும் அண்ணல்எழில் தனில் மயங்கி ஆழியிடைப் போய் மறையா தயர்ந்துகிற்கச் சிதமதி பொறுமையின்றி விரைந்து வந்து, சேசுவெழில் கண்டுவெட்கித் தேய்ந்த தம்மா! 178

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/191&oldid=807444" இலிருந்து மீள்விக்கப்பட்டது