பக்கம்:பருவ மழை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவினிலே திருவுடையார் கல்வி கேள்விக் கலைகளிலே திறமுடையார் காண்போர் வேட்கும் உருவினிலே ஒளியுடையார்! அறம் சுரக்கும் உளத்தினிலே உயர்வுடையார் ஆன்ம ஞானம் தருவதிலே தெளிவுடையார்! இடையருத தவத்தினிலே மனமுடையார் இரங்கும் நெஞ்சின் கருணையிலே தாயனையார்! இவரைப் போலே காசினியிற் காண்பதரி தாகும் மேலோர்! ஒருகன்னம் தனில் அடித்தோன் தனக்கு மற்றும் "ஒரு கன்னம் தனைத்திருப்பிக் காட்டு” என்றும், "ஒரு அங்கி கேட்டவர்க்கு உன்னிடத்தில் உள்ளமறு ஆடையையும் அளிப்பாய்” என்றும், "பிறர்நெஞ்சம் புண்படுத்தா திருப்பதொன்றே பேரறமாம் மானுடர்க்கு” என்றும் சொன்ன அறவாழி அந்தணனின் பிறந்த நாளே அகிலத்திற் சிறப்புமிகும் திருகா ளாகும்! தண்ணிரில் விளக்கெரித்த தன்மையாளன், தாரணியில் ஏதிலர்பால் இரக்கம் கொண்டு விண்ணுட்டின் பரமபிதா தன்னை வேண்டி விருப்பமுடன் அப்பங்கள் பெற்றுத் தந்து உண்ணிர்கள்! என்று உளக் கருணை யோடு உபசரித்த புண்ணியனின் பாதத் திற்குக் கண்ணிரைக் காணிக்கை யாகத் தந்தால் கரைந்திடும் கம் பாவமெல்லாம் கணத்திற் காண்பீர் 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/192&oldid=807446" இலிருந்து மீள்விக்கப்பட்டது