பக்கம்:பருவ மழை.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலைகுலைந்து அலமலந்து நிற்கும் மக்கள் நிலைஉணர்ந்து நெறி உயர்ந்து வாழ்வதற்கும், உலகனைத்தும் ஒற்றுமையைச், சமத்து வத்தை உடன்பிறந்த சோதரர்கள் என்னும் பண்பை, மலைமுகட்டின் உச்சியிலே நின்றெடுத்து மானிடர்க்குப் போதித்த புனித தேவன் விலைமதியா நீதியினை வையம் ஒர்ந்தால் வெறிச்செயல்கள் ஒழிந்தமைதி விளையும் காணிர்! -சிலுவையிலே ஐயன் உடல் தனைப்ப தித்துச் சித்ரவதைச் செயல்புரிந்த போதும் தீயக் கொலைவெறியர் தமக்கிரங்கி இறைவ னின் பால் கோரிக்கை விட்டழுத குணத்தின் குன்ரும்! குலமழியத் துணைபுரிந்த கொடுமை மிக்கக் கோடரியின் காம்பையொத்த ஜூடாஸ் போன்ற புலையரெல்லாம் அழிந்தொழிந்து போனர் அந்தப் புனிதமகான் ஏசுபிரான் உயிர்த்தெ ழுந்தார்! 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/193&oldid=807450" இலிருந்து மீள்விக்கப்பட்டது