பக்கம்:பருவ மழை.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானதியைக் கங்கையென்றே வழங்கு வார்கள் வளம்கிறைந்த அங்கதியை வானிருந்(து)இம் மானிலத்திற் பாய்வதற்குப் பகீரதன் முன் மாதவங்கள் மேற்கொண்டான் என்பார்! இன்றும் வானகத்தை கோக்கிக்கார் மேகத்தின் பால் மழைவேண்டற் கவியரங்கம் நிகழச்செய்த வானதி ஏ. திருநாவுக்கரசு தன்னை வாழ்த்துகின்றேன் நவீனபகீ ரதன்பேர் வைத்து பூதங்கள் ஐந்தாலே உலகின் சேர்க்கை புலன் ஐந்தின் ஆட்டம்தான் மனிதன் வாழ்க்கை காதங்கள் ஒன்று பட்(டு)ஓர் உருவ மாகி கல்உயிர்ப்புக் கொண்டிடுங்கால் பிறப்பென்கின் ருேம்! பேதமுற்றுப் பூதம்ஐந்தும் பிரிந்து சென்று பிரபஞ்சப் பெருவெளியிற் கலத்தல் சாவாம்! வேதங்கள் உபநிடதம் மறைகள் எல்லாம் விரித்துரைக்கும் தத்துவங்கள் இஃதே யாகும். கட்டநடுப் பகுதியுறும் பூமிப் பந்தின் கன்னிரை உவர்நீரைக் கழிவு நீரைச் சுட்டெரித்துக் கதிர்த் துய்மை ஆவி யாக்கிச் சுண்டியிழுத் திடும்வேளை, இடையில் ஆங்கே வெட்டவெளிப் பொட்டலிலே காற்றின் வட்டம் விளையாடிச் சுழன்றதனை விசும்பாய் மாற்றி வட்டமிடும் போ(து) அதன்மேல் குளிர்ச்சி மோத வான்மேகம் பெய்வதையே மழையென்கின்ருேம் 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/195&oldid=807470" இலிருந்து மீள்விக்கப்பட்டது