பக்கம்:பருவ மழை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கெமது நாட்டினிடை இரவி காய்ந்து ஏரிகுளம் குட்டைகளில் கடலில் மற்றும் தங்குதடை யின்றிஓடும் ஆறு வாய்க்கால் தருக்கள் நிறை காடுகளில் பூங்கா தன்னில் துங்கமிகும் மலர்களிடைத் துளிர்க்குக் தேனில் தூய்மைமிகும் பயிர்களிலும் கவர்ந்த நீரை எங்கொளித்து வைத்துவிட்டு எம்மையெல்லாம் ஏங்கவிட்டு வேடிக்கை பார்க்கின் ருய்ரீ: உழைக்கின்ற உழைப்பாளர் பயனை யெல்லாம் உரிஞ்சித்தன் சுகபோக வாழ்வாய் மாற்றிக் கொழுக்கின்ற முதலாளி வர்க்கத் தாரின் கொடுமைகிறைக் கெடுமதியும், கடத்தல் செய்து பிழைக்கின்ற பேய்மனமும், பதுக்கல் செய்து பெருங்கொள்ளை லாபமிட்டுப் பணத்தைச் சேர்க்கும் பழக்கங்கள் மேக மென்னும் உன்னி டத்தும் படிந்திருத்தல் கண்டுள்ளம் பதைபதைத்தேன்! பதைபதைத்து மக்களெல்லாம் பசியால் கொந்து படுபாவி மேகமென்றுப் பழித்துக் கூறும் அதர்மநிலை தன்னை இன்றே மாற்றிக் கொள்வாய்! அதிவிரைவில் மாமழையைப் பொழியச் செய்வாய்! இதயமெல்லாம் கைக் துருகிக் குடிநீ ருக்கும் ஏங்குகின்ருேம் தாகத்தால் இளைத்து வாடி! சதிச் செயலை விட்டுவிடு, இன்றேல் எங்கள் சாட்டையடிப் பாட்டடியைத் தாங்க மாட்டாய்! 1 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/196&oldid=807472" இலிருந்து மீள்விக்கப்பட்டது