பக்கம்:பருவ மழை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனி தாவ தெங்கும் காணுேம், யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை! வெறும் புகழ்ச்சியில்லை” என்று இறுமாப்போடு கூறுகின்ருன் அமரகவி பாரதி. ஆனால், அந்த இறுமாப்புக்கு உரியவர்களாகிய நமது இன்றைய நிலை என்ன? கம்பன் வள்ளுவன் இளங்கோவை விட்டுத் தள்ளுங்கள். இடைக்காலத்திலே எத்தனை எத்தனை சிற்றிலக்கியங்கள் தோன்றின காளமேகம், ஒட்டக்கூத்தன்,புகழேந்தி,அத்தகக் கவி வீரராகவர், அருணகிரி, மாம்பழக்கவி, சுப்ரதீபக் கவிராயர், அண்ணுமலை ரெட்டியார் இன்னும் எத்தனை எத்தனை புலவர்கள் தமிழை வளர்த்தனர்! சித்தர்கள் பாடல், தனிப்பாடல் திரட்டு, திருப்புகழ், காவடிச்சிந்து, காதல், தூது, கலம்பகம், அந்தாதி போன்ற அளவில்கூட இற்றைத் தமிழகத்தில் ஒரு நூல் வருவதற் கான வாய்ப்பைக் காணுேம். ஆழமும் அழுத்தமும் அற்ற அவலப் புலம்பல்களும், அலங்கோலச் சிதறல்களும்தான் இன்றையக் கவிதைக் கலையின் நிதர்சன நிலை. எனவே நானும் எனது கவிதை நூல் ஒன்று வெளிவருவதற்குத் துணிந்து ஒப்புதல் தந்துவிட்டேன். அவ்வப்போது நாட்டின் சூழ்நிலைக்கேற்ப எனது இதயத் தில் எழுந்த உணர்ச்சியின் எதிரொலியே பருவமழை” என்னும் இக்கவிதை நூல் தொகுப்பு. 1945-ம் ஆண்டு இசையின்பம்’ என்னும் தலைப்பில் இசைப் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளி யிட்டேன். அதன் பிறகு இப்போதுதான் ஒரு கவிதை நூல் வெளிவருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/20&oldid=807481" இலிருந்து மீள்விக்கப்பட்டது