பக்கம்:பருவ மழை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்க ளெல்லாமே தலை கீழாகச் சாத்திரங்கள் கோத்திரத்துக் கொன்ருய் மாறி எத்தர்களின் ஏமாற்று வித்தை யோங்கி இருட் ஜாதி மதங்கள் பல தோற்று விக்கும் பித்தர்களே ஞானியென வேஷ மிட்டுப் பிதற்றுங்கால் ஞாலத்தின் மயக்கம் நீங்கிச் சத்திய சன் மார்க்க சங்கம் தன்னைக் கண்ட தனிக்கருணை வள்ளல் திரு வடிகள் சார்வாம்! சித்தர்களும் முத்தர்களும் தேடிக் காணு சின்மயகற் றேசிகனைச் சீத்தத் துள்ளே வைத்திருக்கும் பேறுபெற்ற வடலூர் ஞான வள்ளலெனும் இராமலிங்க வடிகள் தந்த புத்தமுதப் பெருங்கருணைத் தெய்வீ கச்சீர் பொழிகின்ற திருவட்பா படிக்கக் கேட்க நித்தியமாம் பரம்பொருளைக் காட்டும் சாகா நிலையருளும் சன்மார்க்க நெறியும் கூட்டும்! பால்வருணப் பேதத்தை நீக்கி என்றும் பகைவளர்க்கும் ஜாதீயப் பிரிவை நீக்கி நால்வருணம் போதிக்கும் கவைகள் நீக்கி கலிவுதரும் தீண்டாமைக் கொடுமை நீக்கித் தோல் வருணம் காட்டுகின்ற மாந்த ரன்றித் தொல்லுலகின் உயிர்க்குலங்கள் அனைத்தும் தெய்வ மேல் வருண மாகுமென்னும் ஆன்மநேய மிகு மொருமைப் பாடுகண்ட மேலோன் வாழ்க ! 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/201&oldid=807485" இலிருந்து மீள்விக்கப்பட்டது