பக்கம்:பருவ மழை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளும் இளம்பருவத் துடிப்புமிகும் முத்தையா பள்ளிஉயர் நிலப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டு "கண்ணதாசன்” வணங்கா முடி"யென்ற புனைப் பெயரில் எண்ணற்ற கட்டுரைகள் எழுதிக் குவித்ததையும் கவிதைத் துறைதனைக் கனவிலும் நினைத்தறியா இவர்இன்று கவியரசாய் ஏற்றம்பெற் றிருப்பதையும் திரைஉலகில் பாட்டெழுதித் திரட்டுகின்ற செல்வமெல்லாம் அரசியலில் இழந்துவிட்டு அவலநிலை யுற்றிருக்கும் கண்ணதா சனைகினைந்துக் கவலைப் படுவதுண்டு;என்னசொல்லி என்னபயன்? இதுஎங்கள் தலையெழுத்து உள்ளத்துஉணர்ச்சிக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் எள்ளத்தனைகூட இடமில்லை அரசியலில்! சத்தியம் தர்மமெல்லாம் தலைகீழாய் மாற்றிவிடும் பித்தலாட்டக் காரனெல்லாம் பிழைக்கும் தனிஉலகம்! தன்வாழ்வு தன்குடும்பம் தன்.உறவு தன்ஜாதி என்பதல்லால் வேறெதையும் எண்ணத்திற் கொள்ளார்கள் நன்றியுள்ள ஜீவன் காயென்று நாமறிவோம்நன்றிகெட்ட காயென்று மனிதனைத்தான் சொல்லுகின்ருர், அதனுல்தான் கண்ணதாசன் அடிக்கடிக் கட்சிமாறி இதயமுள்ள மனிதர்களை எங்கெங்கோ தேடுகின்ருர்! இந்தக் கதையெல்லாம் இவர்க்குமட்டும் உரியதல்ல; ஐந்து கவிஞருக்கும் அனைத்தும் பொருந்துவதே 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/205&oldid=807493" இலிருந்து மீள்விக்கப்பட்டது