பக்கம்:பருவ மழை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தநாள் சுதந்திரப்போர் அணியிற் சிறைபுகுந்த சுந்தரம் இன்றுவரைச் சுகமென்ன கண்டுவிட்டார்? தணிகையை மீட்பதற்கும் தலைநகரைக் காப்பதற்கும் இனிய தமிழ் மொழிக்கு ஏற்றங்கள் சேர்ப்பதற்கும் நானும் கு. மா. பா. வும் நம்பிவானம் பாடியுடன் சேனைத் தலைவர்களாய்ச் சிறைப்பட்டோம் பன் முறைகள்! சுத்திசுத்திப் பொதுமேடை தோறும் முழக்கமிட்டுக் கத்திக் கத்திப் பச்சை ரத்தம் கக்கி உடல் மெலிந்து கடைப்பினமாய் நடமாடும் நம்பிவானம் பாடிக்கு உடுப்பதற்கும் உண்பதற்கும் உத்திர வாதம்உண்டா? கழனிக்கு நீர்பாய்ச்சிக் கண்டுமுதல் காணுமல் விழலுக்கு நீர்பாய்ச்சி விண்காலம் போக்கிவிட்டோம்! கொள்கைக்கு உழைத்தன்றிக் கொள்ளையிட நினைத்ததில்லை! எல்லைகளைக்காத்ததன்றி எவர்பொருளும் பறித்ததில்லை! ஏறிவந்த ஏணிதனே எட்டி உதைத்து விடும் பேறுபெற்ற மாண்புமிகும் பெருந்தலைவர் நாங்களல்லர்! ஆலுைம் இன்னமும்தான் அரசியலில் இருக்கின்ருேம்! ஏனே தெரியவில்லை! இறைவனுக்குத் தான் வெளிச்சம்! அரசியலால் அடுக்கடுக்காய் அல்லல்களை ஏற்றதல்லால் அரசியலால் அணுவளவும் ஆதாயம் அடைந்ததில்லை! ஆல்ை, எப்படியோ கு மா பா. இறைவன் திருவருளால் தப்பிப் பிழைத்துமேல் சபையில் அமர்ந்துவிட்டார்! இடையில் வந்த யார்யாரோ எத்திப் பறித்துவிட 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/206&oldid=807495" இலிருந்து மீள்விக்கப்பட்டது