பக்கம்:பருவ மழை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடைபெற்ற சூழ்ச்சித் தடைகள் எல்லாம் தவிர்த்து முதல்வர் கலைஞர் ஏழை முகம்பார்த்துத் தந்ததற்கு இதயம் கலந்த நன்றி என்னுடைய பாராட்டு எல்லைப்போர்க் களம்கண்ட இவர் இங்கே வெளிமயமாம் தில்லைத் தலப்பெருமைச் சிறப்புக் கவியிசைப்பார்! அடுத்துத் தமிழ்வளர்க்கும் ஆசிரியர் மூவரிங்கே தொடுத்துக் கவிமாலைச் சூட்டுதற்கு வந்துள்ளார்! பேராசிரியர் உளுந்துார் பேட்டையுறு சண்முகனர் ஏராளமான இசைப் பாடல் எழுதியவர்! அண்ணுமலை அரசர் சர்வகலா சாலையிலே தண்ணுர் மொழிவளர்க்கும் தமிழ் அறிஞர் அவரிங்கே கண்ணப்பர் அருள்பெற்றக் காளத்தி பெருமைபற்றி வண்ணத் தமிழ்க்கவிதை வழங்கிடுவார் மற்றுமிங்கே திருமயிலை ரசிகர்கட்குச் சிதம்பரம் சுவாமிநாதன் அறிமுகமே தேவையற்ற அணைகடந்த வாயாடி! பட்டி மன்றங்களிலே படுசுட்டித் தனமாகக் கொட்டி முழக்கிடுவார் கொடிகட்டி ஆடிடுவார்! ஆல்ை, இவர் இன்று அண்ணுமலை தீபம் காணுதவர்களுக்கும் கண்டவர்க்கும் புத்தொளிகள் தோன்றும்படிக் கவிதைத் தொகுத்திங்கே வழங்கிடுவார் ஆன்றதமிழ்ப் புலவர் அன்பர் பசுபதியும் வாக்குத் திறமையிலும் வாதாடும் வன்மையிலும் ஆக்கம், அறிவுகயம் அனுபவங்கள் நிறைந்திருக்கும் திருவானைக் காவல்செய்த திருத்தலத்தண் ணிர்ச்சிறப்பை 194

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/207&oldid=807497" இலிருந்து மீள்விக்கப்பட்டது