பக்கம்:பருவ மழை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவாக்கிக் காட்டுகின்ற உயர்கவிதைக் கேட்டுவப்போம்! மண்ணகத்தை விண்ணகமாய் மாற்றும் சிறப்பதனைத் தன்னகத்தே கொண்டிருக்கும் தன்னிகரில் திருக்காஞ்சி உன்னதகற் பெருமையெல்லாம் உருவாக்கிக் கொண்டுஇங்கே கானம்பாடி நம்மைக் களிம்புறச் செய்வதற்கு வானம்பாடிக் கவிஞர் வந்துள்ளார்! மற்றுமொரு இளங்காளை மதிவண்ணன் இங்கேதான் தொகுத்துவந்த வளமான கற்பனையால் மயிலைப் பதிச்சிறப்பை துள்ளும் எழுச்சியுடன் துடிப்போடு நாம்ரசிக்க அள்ளித் தரும்கவிதை அமுதைச் சுவைத்திடுவோம்! ஆறுதலை அளிக்கும் ஆறுதிருத் தலங்கள் பேறுகளை விளக்கிப் பேசுவதிக் கவியரங்கம்! இந்தக் கவியரங்கின் இனிதான தலைப்பை கன்ருய்ச் சிந்தித்துப் பார்த்தால்தான் சிறப்பை உணர்ந்திடலாம்! உலகை இயக்குகின்ற ஒப்பரிய சக்தியெல்லாம் நிலம், நீர், தீ, வெளி, வளி,யாய் நிச்சயித்த தத்துவத்தை வைப்புத் தலங்களென்று வகைப்படுத்திக் கோயில் கண்ட அற்புதத்தை, ஞான அறிவின் முதிர்ச்சிதன்னை எப்படித்தான் புகழ்ந்துரைப்பேன்! இதயம் நெகி ழுகின்றேன்! கற்பனைதான் என்றிதனைக் கருத்திற் பதித்தாலும் இப்பரந்த உலகில் இந்த ஏற்றமிகும் சிந்தனைக்கு ஒப்பிட்டுச் சொல்வதற்கு உலகில் ஒர்மதம் ஏது? 195

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/208&oldid=807499" இலிருந்து மீள்விக்கப்பட்டது