பக்கம்:பருவ மழை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தரத்தில் ஆங்காங்கே அண்டங்கள் எத்தனையோ! பக்தினைப்போல் சுழல்வதற்கும் பருவங்கள் மாறுதற்கும் சந்திரனும் சூரியனும் சரியான திசைகளில்ே வந்துவந்து போவதற்கும், வானம்மழை பொழிவதற்கும் காற்றும் ஒளிப்பிழம்பும் கண்ணை இமை காப்பதுபோல் ஆற்றல் வழங்குகின்ற அற்புதத்தை என்னென்பேன்! உலகின் சுழற்சியிலே ஓரணுவும் மாருமல் நிலவும் இயற்கையெல்லாம் நிகழ்த்துகின்ற சக்தி எது? ஆக்குவதை அழிப்பதுவும், அழித்தவற்றை ஆக்குவதும் நீக்கமற நிறைந்தென்றும் நிலையாக நிற்பதுவும் பஞ்சபூதங் கள்செய்யும் பரிணும வித்தையென்று நெஞ்சால் நினைத்தும் மனத்தாலே சிந்தித்தும் திருத்தில்லை, திருக்காஞ்சி. திருவண்ணு மலையென்றும் திருவானைக் காவல்மற்றும் திருக்கா ளத்தியென்றும் சிந்தைகடந்து கிற்கும் சிவப்பே ரொளிதனக்கு ஐந்து திருத்தலங்கள் அமைத்த பதிகளினை வந்தித்து வழிபட்டு வரலாறு பலபடைத்து ஐந்தொழிலை ஆற்றுகின்ற அமலன் திருத்தாளை போற்றி வணங்குவதும் பூசனை.மேற் கொள்ளுவதும் ஆற்றுப் படுத்தி வந்தார்-ஆன்றமைந்த ஞானியர்கள்! வைப்புத் தலங்களெனும் இப்பெரிய தலங்களுடன் ஒப்பிட்டுப்பேசுவதற் குரிய சிறப்பெல்லாம் கற்பகத்தாய் மாமயிலாய்க் கபாலியினைப் பூசித்துக் 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/209&oldid=807500" இலிருந்து மீள்விக்கப்பட்டது