பக்கம்:பருவ மழை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவை வணக்கம் திருமயிலின் உருவெடுத்துச் சிவனுர் தம்மை தேவிபரா சக்தி உமைப் பூசைசெய்த பெருமையில்ை திருமயிலை யெனும் பேர்பெற்ற பெட்புறுமிவ் வாலயத்திற் சிறப்புற் ருேங்கும் திருமயிலுர் சிங்கார வேலர் சஷ்டித் திருவளர்க்கும் விழாவினிலே எமையழத்ைது அருமையுறு கவியரங்கம் அமைத்துத் தந்தோர் அனைவருக்கும், அவையினர்ககும் வணக்கம் சொன்னேன்! இந்தப்பா வரங்கினிலே எனையும் சேர்நது இருந்திடப்பா வெனப்பணித்தார்! இங்கு மற்ருேர் சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா சாரும் வஞ்சிப் பாவும் சிந்துப் பாவும் கேட்டுச் சிந்திப்பார் அவையினிலே நானும் சேர்ந்து சிறுமுனைப்பால் பாடுதற்குத் துணிந்தேன. ப்பா! கந்தப்பா கருணையப்பா கண்பாரப்பா கைகொடுப்பார் உன்னையன்றி கதியாரப்பா? சமயக் குரவரெல்லாம் தமிழ்க்கவிஞர் எனும்பெருமை தமிழினத்திற்கே உரிமை தரணியில் மற்ருேர்க்(கு) அருமை சமயம் மொழிஇரண்டும் சமநிலையில் வளர்வதற்கு அமையும் கருவியென ஆக்குவித்தார் தமிழ்க் கவிதை 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/212&oldid=807504" இலிருந்து மீள்விக்கப்பட்டது