பக்கம்:பருவ மழை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் அழிந்தாலும் தமிழ்க் கழிவில்லை. அதல்ை சமயத்தின் தத்துவத்தைத் தமிழ்க் கவிதைக்குள் நுழைத்தார்! சமயம் உடலென்ருல் தத்துவங்கள் உயிரென்பேன்! அமையும் உடல்பொய்த்தாலும், ஆருயிர்க்கு அழிவேது? இத்தகைய தத்துவங்கள் எத்தனையோ தமிழினத்தின் சொத்தாய், இலக்கியமாய்த் துலங்குவதைக் காணு கின்ருேம் அம்மையாய், அப்பனுமாய், ஆண்டாய்ைச் சற்குருவாய் செம்மையெல்லாம் இறைவனுக்கும் சிறுமையெல்லாம் -தங்களுக்கும் மையக் கருத்தாக்கி வைப்பதுவே தெய்வீகம்: உய்யும் வழியென்றும் உணர்ந்தார்! உரைத்திட்டார்! பைநாகப் பாய்சுருட்டிக் கொள்'ளென்ற ஒர் கவிஞன் பின்னல் திருமார்பன் போனகதை நீர் அறிவீர்! முன்னலே சுந்தரரின் முன்தோன்றி முக்கண்ணன் என்னையே பாடென்று இரந்த கதையும் அறிவீர்! நெற்றிக்கண் கண்டும் சொற் குற்றம் குற்றமே என்ற வெற்றிக்கவி கீரன் வீரக்கதை யறிவீர்! கற்கோயில் சிலபோது காலத்தால் அழிவதுண்டு சொற்கோயில் நிலைத்துவிட்டால் என்றும் அழிவ தில்லை கடவுள் கருணையில்ை கவிஞனை வாழவைப்பான்! கடவுளையும்கவித்திறத்தாற் கவிஞன்தான் -வாழவைப்பான்! 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/213&oldid=807505" இலிருந்து மீள்விக்கப்பட்டது