பக்கம்:பருவ மழை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரமனது தன்முனைப்பைச் சுட்டிக் காட்டி பிடித்து வந்து சிறையிலிட்டு தலையிற் குட்டித் திறமையுடன் படைக்கின்ற தொழிலு மாற்றி தேவர்களின் படைநடத்திப் பகையை வீழ்த்தி ஒருதுரன் தனைத்தனது ஊர்தி யாக்கி ஒப்பரிய பதுமனைத்தன் கொடியு மாக்கி பரமனுக்குப் பிரணவமெய்ப் பொருள் உணர்த்தி பரமகுரு வெனும்பெயரும் படைத்த சீலன்! அகிலாண்ட கோடியெல்லாம் படைத்துக் காத்து அளிக்கின்ற பரம்பொருளின் அம்ச மாகிச் சிகிவாகனம்கோழிக் கொடியும் தாங்கித் திகழ்ஞான பண்டிதகற் குருவு மாகிப் புகழ்வாய்ந்த போர்க்களத்தில் அமரர்க் கெல்லாம் புதுவாழ்வு தந்ததிரு வெற்றி வேலன் துகழ் தீண்டாத் திருப்பரங்குன் றத்தில் தெய்வக் குஞ்சரியை மணமுடித்துக் காட்சி தந்தான்! வருத்தமிகும் தேவர்படைத் தலைமையேற்று வல்லரக்கர் குலத்தினையும் வேர றுத்துத் திருத்தணிகை மலைமேவிச் சினம் தணிந்து தேவாதி தேவர்களுக் கருள் சுரந்து மருத்துவன் போல் பிறவிஎனும் பிணி களைந்து மகிழ்ச்சியுடன் கொலுவீற்று இருக்கும் போது பொருத்தமுடன் தான்கண்ட கனியின் மாண்பைப் பொல்லாத கலகமுனி புகழ்ந்து வந்தான்! 202

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/215&oldid=807507" இலிருந்து மீள்விக்கப்பட்டது