பக்கம்:பருவ மழை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போனவன்போல் போக்கினத்தான் காட்டி மீண்டும் புதியதொரு வளையல் செட்டிவேடமிட்டு தேனெழுகும் காதல் ரசம் சொட்டச் சொட்ட தித்திக்கும் சரசவுரை பலவும் பேசி மான்மகள் கைத் தொட்டிழுத்து வளைகள் பூட்டி மலர்க்கரத்தைக் கண்ணில் ஒற்றி முத்த மிட்டுக் கூனலுற்ற முதுகுகன்ருய் நிமிரும் மட்டும் கோதைகையால் மொத்துண்டுக் குதித்தே சென்ருன்! மொத்துண்ட முதுகுவலிச் சுவைமா ருமுன் மோகனப்புன் முறுவல்செய்யும் குறவள்ளிப்பெண் மெத்தென்ற இளம்தளிர்க்கைத் தீண்டும் இன்பம் மீண்டும்கான், சுவைத்திடத்தான், வேண்டும் என்று தத்துண்டுத் தள்ளாடித் தடியை ஊன்றித் தாடிசடை, முடிவெளுத்துத் தோல்சு ருங்கிப் பற்றற்ற முனிவரைப்போல் பசப்பிப் பேசிப் பாவைவள்ளிப், பைங்கொடியைப் பற்றிக் கொண்டான்: பற்றற்ருன் பற்றியமெய்ப் பற்றைக் கண்டு பாவைவள்ளி அதிர்ச்சியுற்ருள், சினமும் கொண்டாள்! முற்றித்தான் பழுத்துவிட்ட கிழவன் மீது முனியத்தான் போமோஎன் பெயர்த்தி யைப்போல் சுற்றித்தான் வருவதல்ை கேலி பேசிச் சுவைக்கத்தான் ஆவலுற்றேன், வயதா லுைம் வற்றித்தான் போய்விடுமோ, காதல் நெஞ்சம் வயதைத்தான் பார்ப்பதுண்டோ, என்று ரைத்தான்! 204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/217&oldid=807509" இலிருந்து மீள்விக்கப்பட்டது