பக்கம்:பருவ மழை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துடித்தெழுந்தாள், தடுமாறிக் கிழவன் வீழ்ந்தான்! தூக்கிவிடும் நோக்கமின்றிச் சினந்து நின்ருள்! கடித்தெழுந்த கிழவன்உடல் நடுக்கத் தோடு நான்பசியால் வாடுகின்றேன் புசிக்க அன்னம் படைத்திடென்ருன், தினைமாவும் தேனும் தந்தாள்! பாதிதின்னும் போதில்தொண்டை விக்கிக்கொண்டான்! மடைச்சுனைநீர் அருந்துதற்கு அழைத்துச் சென்ருள் மண்பொம்மை போல்கிழவன் அதற்குள் வீழ்ந்தான்! சுனைக்குள்ளே வீழ்ந்துவிட்ட கிழவன் தன்னைத் தூக்குதற்குக் கைகொடுத்த வள்ளிப் பெண்ணின் பணிக்கையைப் பற்றிஉள்ளே இழுத்துக் கொண்டான்! பாவைவள்ளி உளம்சோர்ந்துத் துடிது டித்தாள்! எனைமணம்பேன், என்று சொன்னல், கரையிற் சேர்ப்பேன். என்று சொல்லிக் கெக்கலித்தான், கிழவன் வள்ளி மனமின்றி, மணப்பேன்என்று உறுதி சொல்ல வள்ளியுடன் சேர்ந்தெழுந்து கரைக்கு வந்தான்! ஏறிவந்த மறுகணமே கிழவன் தன்னை ஏமாற்றிவிட்டதுவாய் வள்ளி சொன்னுள்! காரிகையே நீதனித்து இருக்கும் போது காட்டிடையே மிருகம்வந்தால் என்ன செய்வாய்? கூறிடென்ற, கிழவனிடம், நகைத்து வள்ளி கொன்றழிக்கும் வலிமையுண்டு, ஆனல் யானைப் பேரெடுத்துச் சொன்னலே நடுக்கம் என்று பேதைசொல்லக் கிழவன் ஒரு திட்டம் போட்டான்! 205

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/218&oldid=807510" இலிருந்து மீள்விக்கப்பட்டது