பக்கம்:பருவ மழை.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைமுகன் தன் அண்ணன் அருளை வேண்ட அக்கணமே வாரணமாய் அவனும் வந்தான்! மீன8ணய விழிமருண்டு துடித்தாள் வள்ளி! வேடிக்கை. காட்டிநின்ருன் கிழவன்! ஆங்கே மான2ணய வள்ளியினை மறித்துத் தன்னை மணம்புரியச் சத்தியம்நீ செய்தா லன்றி யானை உன்னை விட்டகலா தென்று சொல்ல யவ்வனத்தை முதுமைக்குத் தத்தம் செய்தாள்! கண்ணிராய்க் கரைந்துருகும் வள்ளி யின்முன் காளையுருக் கொண்டு நின்ருன் கந்த வேலன்! அந்நேரம் நாரதரும் அங்கு வந்தார்! அமரர்களும் முனிவர்களும் ஆசி தந்தார்! தன்னேரில், லாத்தலைவன் தலைவி யாகத் தணிகையிலே முருகன் வள்ளி மணத்தைக் காணும் கண்ணேதான் கண்ணென்பேன்-காணு தார்கள் கண்ணிருந்தும் கலியுகத்தில் குருட ரென்பேன்! வள்ளிக்கு வாய்த்த வள்ளல்-தணிகை மலைமீதமர்ந்த வள்ளல்-வண்ணப் புள்ளிக் கலாப வள்ளல்-பக்தர் போற்றித் துதிக்கும் வள்ளல்-தமிழை அள்ளிக் கொடுக்கும் வள்ளல்-கவிதை ஆரம் தரிக்கும் வள்ளல்-கற்ருேர் உள்ளம் கவர்ந்த வள்ளல்-எனது உயிரிற் கலந்த வள்ளல்-குற- (வள்ளி) 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/219&oldid=807511" இலிருந்து மீள்விக்கப்பட்டது