பக்கம்:பருவ மழை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை பிள்ளைகள் தான் இருப்பினும் உன்னைப் போன்று உத்தமப் பிள்ளை யென்னும் உயர்வினைப் பெறுவாருண்டோ? பித்தனைப் போலே ஏங்கிப் புலம்புமா(று) என்னை வைத்து அத்தனை விரைவாய் நீசென்(று) அடைந்தது எங்கே ஐயா? ஏறுபோல் கடையும், தூய எழிலுறு உடையும், கன்னற் சாறுபோற் கனிந்த பேச்சும், தாமரைச் சிரிப்பும், அன்பில் வேறுபாடற்ற போக்கும், விவேகமும் இனிய பண்பும், வீறுகொள் மார்பும் சாய்ந்து வீழ்ந்ததே ஒரு கொடிக்குள் பல்கலைக் கழகத்தில் உன் பணியினை முடித்துக் கொண்டு இல்லத்திற் கேகுதற்கு ஏறிய பேருந்(து) ஆங்கே எல்லையில் வெகத்தோடு இடப்புறம் சென்று மோதிக் கொல்லவா வேண்டும்; இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பு? 212

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/224&oldid=807517" இலிருந்து மீள்விக்கப்பட்டது