பக்கம்:பருவ மழை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கொடிக்குள் பேருந்தை ஒட்டுநர் மோதி உந்தன் திருவுடல் தனைச் சிதைத்துச் சீவனைப் பிரித்தார்! நீயென் பருவுடல் தனையும் ஆவி தனையும் ஒவ்வோர் நொடிக்கும் கரைக்கின்ருய்ப் பெருமூச் சாக்கிக் கவலை யைஉளத்தில் தேக்கி பல்லவன் போக்கு வரத்துப் பணக் கொள்ளை யடிப்பதற்குச் சில்லரை ஆசை காட்டிச் சிறு மதியினரை த்துரண்டி நல்லவன் உன் போன்ருரை காட்டினில் அடுத் தடுத்துக் கொல்லவா வேண்டும்; இந்தக் கொடுமைக்கு முடி(வு) எப்போது? போரடா இங்கேதான் உன் பாலகன் வீழ்ந்தான்' என்று கேரிலே சுட்டிக் காட்டி நிற்பதைப் போல்ஓர் பக்கம் பாரதி சிலையும் பக்கல் பாட்டாளர் சிலையும் காணக் கோரமாய் மோதிச் சாய்த்த கொடுமையை மறக்கப் போமோ! 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/225&oldid=807518" இலிருந்து மீள்விக்கப்பட்டது