பக்கம்:பருவ மழை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டிளங் காளை நீயோர்க் கன்னியைக் கைப்பிடித்து மட்டிலா இன்பம் துய்க்கும் மாமணக் காட்சி காணக் கட்டிய மனத்தின் கோட்டைக் கனவெல்லாம் தகர்த்துத் தீயைக் கொட் டியே விட்டாய் நெஞ்சக் கொதிப்பினுல் குமுறுகின்றேன்! தங்கையர் அனைவருக்கும் தகுமணம் முடித்த பின்தான் எங்களின் மணத்தைப் பற்றி எண்ணலாம்; என்ருய் அந்தத் தங்கையர் உனை யிழந்துத் தவித்துளம் ஏங்கி நிற்க எங்குநீ சென்ருய்! எம்மை எப்படி மறந்தாய் ஐயா! தம்பிக்கும் தமயனுக்கும் தங்கையர் தாய் தனக்கும், அம்பிக்கும் அக்காளுக்கும் ஆருயிர் பெரியம் மைக்கும் கம்பிக்கை ஒளி பரப்பும் கற்குணக் குன்றம்; என்போர்க் கண்பட்டுப் போனதாலோ காலனுர்க் கடுகிச் சென்ருய்? 2 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/227&oldid=807520" இலிருந்து மீள்விக்கப்பட்டது