பக்கம்:பருவ மழை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உனக்கெனத் தேடி வந்த உயரிய சம்பந் தங்கள் அனைத்தையும் தங்கையர்க்காய் அடுத் தடுத்தே மறுத்துத் தனக்கென வாழ்க் திடாத தனிப்பெருங் குணத்தின் குன்றே! எனக்குனைப் போலோர் பிள்ளை எந்தஜென் மத்தில் வாய்க்கும்? திருவாளா உனக்கு இன்பத் திருமணம் சிறப்பு மிக்கத் திருநாளாய் நடத்து தற்குத் திட்டமிட் டிருந்தேன், அந்த வருங்கால ஆசை யெல்லாம் வாய்ப்பற்றுக் கனவாய்ப் போக ஒருங்ாளில்-ஒரு கொடிக்குள் உன் வாழ்வை ஏன் முடித்தாய்? தமயன் தாய்க் கடன்க ளெல்லாம் தன்கடன் என்று ஏற்றுச் ,சமயம்கேர்ந் திட்ட போது தந்ததைத் தீர்த்து வந்த இமயம்போல் உயர்ந்த உள்ள ஈடில்லாச் செல்வமே நீ இமைமுடித் திறப்பதற்குள் எங்ங்னம் மறைந்தாய் ஐயா! 21 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/228&oldid=807521" இலிருந்து மீள்விக்கப்பட்டது