பக்கம்:பருவ மழை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தையின் நிலையும் அண்ணன் தகையறு நிலையுங் கண்டு சிந்ததம் குடும்ப பாரம் தன்னையே தாங்கி கின்றச் சிந்தையில் தூய்மை கொண்டச் செல்வனை இனியிப்பாரில் எந்தநாள் காண்பே னென்று ஏங்குதென் உள்ளம் அப்பா! அம்பிக்குத் தனிமை யென்னும் ஆற்ருமை தன்னை நீக்கும் தம்பியாய் மட்டுமின்றித் தமயன் போல்-கண்பனைப் போல் தெம்புரை கூறு தற்கும் தேவைக்கு உதவு தற்கும் அம்புவி தன்னில் உன்போல் யாராட உடன் பிறப்பு? தன்னலம் எண்ணிடாது தாங்கருங் குடும்பம் தாங்கும் உன்னத லட்சியத்தை உறுதியாய் ஏற்றுக் கொண்ட பொன்மனச் செம்மலே வுன் பிரிவெனும் துயரத் தீயால் என் மனத்துள் புழுங்கும் ஏக்கத்தை யார் தவிர்ப்பார்: 13 2 ገ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/229&oldid=807522" இலிருந்து மீள்விக்கப்பட்டது