பக்கம்:பருவ மழை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியம் வரைந்து காட்டி உயர்கவி தீட்டிக் காட்டிக் காவியம் பலவும் கற்றுக் கற்பனை வளங்கள் காட்டிக் கோவிலாய் எனதுள்ளத்திற் குடிகொண்ட குலவிளக்கே; ஆவியும் உளமும் மெய்யும் அயர்ந்திடப் பிரிந்தேன் சென்ருய்? எந்தனின் கவிதை யெல்லாம் எடுத்தொன்ருய்த் தொகுத் து அச்சில் தந்திட வேண்டு மென்ற தவிப்புடன் செயல் முயன்ற சிந்தனைச் செல்வமே நீ செய்பணி முடிக்கும் முன்னே அந்தகக் கொடியன் கின்பால் அநீதியை யிழைத்து விட்டான்! ஊனமார் மனம் படைத்தோர், உலுத்தர்கள், கயவர், வஞ்சர், ஈனமார் செயல்மிகுத் தோர், ஏற்ற முற்றிருக்க:-தூய ஞானமார் மனம் படைத்தோர், நல்லவர் கலிதல் கண்டு வானமார் அமர வாழ்வை வலிந்து நீ விரும்பிளுயோ! 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/230&oldid=807524" இலிருந்து மீள்விக்கப்பட்டது