பக்கம்:பருவ மழை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தாலும் நினைக்க வொண்ணு மாபெருங் கொடுமை யொன்று. உனக்கின்று கேர்ந்த தென்னும் உண்மையை த் தமிழகத்துத் தினத் தாள்கள் வாரத் தாள்கள் திங்களொடு கிழமைத் தாள்கள் அனைத்தும்செய்திகளைத் தந்தென் அமைதியைக் குலத்ததப்பா என்மகன் என்று சொல்லும் இலக்கியத் தகுதி முற்றும் உன்னிடம் இருக்கக் கண்டு உள்ளத்தில் உவகை,கொண்டு இன்னுயிர் தனக்கும் எந்தன் இருகண்ணின் மணிக்கும் மேலாய்: மன்னிய கனவை மாய் த்து மறைந்தனை முறையோ ஐயா? உன்னத லட்சியங்கள் உயர்ந்தவர் நட்பு, மற்றும் பன்னருங் கல்வி கேள்விப் பயிற்சியில் காட்டம்; என்றும் தன்னலம் கருதி டாத தனிப்பெருங் குணம் அமைந்த என்னரும் செல்வம் உன்னை எப்படி மறப்பேன் ஐயா! £20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/232&oldid=807526" இலிருந்து மீள்விக்கப்பட்டது