பக்கம்:பருவ மழை.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மகன் பிரிந்தா னென்ற தருணமே ஆவி நீத்த மன்னவன் தயரதன் போல் மாண்பினை யுடையே னல்லேன் உன்னையிங் கிழந்த பின்னும் உயிரின் மேல் ஆசைவைத்து இன்னலத் தாங்கிக் கொண்டு இருக்கின்றேன் சாகவில்லை! உண்ணவும் முடிவதில்லை உறக்கமும் வருவதில்லை கண்களில் பெருகும் துன்பக் கண்ணிரும் நிற்ப தில்ஜல எண்ணத்தில் செயலில் முன்போல் எழுச்சி எள்ளளவு மில்லை வண்ணச் சீரெழில் முகத்தை மறக்கவும் மார்க்க மில்லை. மலையினைப் பிளந்தெடுத்த வன்பெரும் பாறை தன்னை சிலையுரு வாய் வடித்துச் சீவனும் உணர்வும் தந்துக் கலையுரு வாக்கிக் காண்போர்க் கருத் தெலாங் கவருங்கால கொலையுண்டு மடிந்தாய்; அந்தோ கொடுமையிற் கொடுமையப்பா 2 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/234&oldid=807528" இலிருந்து மீள்விக்கப்பட்டது