பக்கம்:பருவ மழை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்(பு)இறப் பியற்கை யென்று பேசுதல் இயற்கை -ஆனல் துறப்பதற் கரிய ஞானத் தூய்மையும் அழகும் வாய்மைச் சிறப்பியல் பனைத்தும் பெற்ற செல்வனே உனேனன் வாழ்வில் இறப்பின லின்றி வேறு எவ்வாறு மறத்தல் கூடும்? மரணத்தை இயற்கை யென்பர்; ஆலுைம் உனக்கு கேர்ந்த மரணத்தை இயற்கை யென்று மடையனும் ஒப்ப மாட்டான் வரன் முறையின்றி வண்டி ஒட்டுகர் வருவாய்க் காகத் திரணமாய் உயிர்க் கொலைகள் செய்கின்ருர், கித்த னித்தம் இறைவன் தன் படையலுக்கு எடுத்துச் சேமித்து வைத்த கறவத்தை வெறி பிடித்த காய்வந்து கொட்டிச் சாய்த்து வெறியாட்டம் ஆடித் தீர்த்த விபரீதச் செயலினைப் போல் நெறிமேவும் உனது வாழ்வை சேர்கள் அழித்து விட்டார்! 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/235&oldid=807529" இலிருந்து மீள்விக்கப்பட்டது